கீவ் நகரில் இருந்து மக்கள் வெளியேறலாம்! உறுதியளித்த ரஷ்யா; ஊரடங்கு நீக்கம்!
இன்று ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் போர் தாக்குதல் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்து இருந்தது. இதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ரஷ்ய ராணுவம் தலைநகர் கீவ் நகரில் இருந்து மக்கள் வெளியேறலாம் என்று கூறியுள்ளது.
கீவ் நகரில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது உறுதி செய்யப்படும் என்றும் ரஷ்ய ராணுவம் உறுதியளித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் ரஷ்ய ராணுவம் இந்த அறிவிப்பினை அறிவித்துள்ளது.
உக்ரைன் வான் பரப்பு எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டதுடன் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் ரஷ்ய ராணுவம் இந்த அறிவிப்பினை அறிவித்துள்ளது.
