உணவுக்காக சிறுநீரகத்தை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள். ஒரு சிறுநீரகத்தின் விலை 70 ஆயிரமாம்!!
சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது.
அதன்பின்னர் தாலிபான்கள் தங்களது ஆட்சியை ஆப்கானிஸ்தானில் அமைத்தனர்.
தாலிபான்கள் நாட்டில் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தநிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தாலிபான்கள் மற்ற நாடுகளிடம் உணவுப்பற்றாக் குறையைப் போக்க உதவி கேட்டு உள்ளநிலையில் மற்றொருபுறம் மக்கள் அவர்களின் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருகின்றனர்.
அதாவது ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெரட் மாகாண மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்டோர் சிறுநீரகத்தை விற்றுள்ளனர்.
5 வயதுக் குழந்தையில் துவங்கி நடுத்தரவயது வரையில் பலரும் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை விற்ற நிலையில் ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.70,000 வரை வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
