மக்களே உஷார்!! இப்பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட்…

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வெப்பம் சராசரியை விட அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு இப்பகுதிகளில் வெப்பநிலை உயராது என இந்திய வானிலை மையத்தின் மூத்த ஆய்வாளர் ஆர்.கே. ஜனமணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடமேற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இப்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக வானிலை மையத்தின் மூத்த ஆய்வாளர் ஆர்.கே. ஜனமணி கூறியுள்ளார்.

நாளைய தினத்தில் இந்தியாவின் தலைநகரமான  டெல்லியில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆர்.கே. ஜனமணி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாளை மழை பெய்யும் என்பதால் அம்மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment