இந்தியாவில் புற்றுநோய் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு அறிக்கையை குறிப்பிட்டுள்ளார்.
அதில் கடந்த 2018ஆம் ஆண்டு 7,33,139 பேரும், 2019ஆம் ஆண்டு 7,51,517, 2020இல் 7,70,230 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் இலக்கு தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது மூலம் புற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் புற்றுநோய் மரணங்களைத் தடுக்க பா.ஜ.க அரசு சரியா நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளது.