மக்களே உஷார்!! லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்..காவல் ஆணையர் எச்சரிக்கை..
ஆன்லைன் லோன் செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது கடன் பெறுபவருடைய செல்போனில் இருக்கும் கான்டக்ட் எண்கள், போட்டோ, தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகின்றன.
அதற்குள் ரூ.5000 பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வட்டி ஏறிக் கொண்டேசெல்லும். பத்து நாட்கள் வரை பணம் திருப்பி செலுத்தாதவர்களுக்கு போன் மூலம் மிரட்டல்கள் வர தொடங்குகிறது.
அந்த வகையில் சென்னையில் சைபர் கிரைம் போலீஸ்க்கு 6 புகார்கள் வந்துதாகவும் லோன் ஆப் மூலம் கடன் பெற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனை தடுக்க பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட சில செயலிகளின் மூலம் லோன் பெற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
