புயல் கரையை கடக்கும்போது மின்வெட்டு ஏற்படலாம்.. இதெல்லாம் தயாராக வைத்து கொள்ளுங்கள்!

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மரங்கள் வேரோடு சாய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மின் கம்பங்கள் பழுதாகி மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .

first aidகுறிப்பாக மின்வெட்டு ஏற்பட்டால் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும் என்றும் அதே போல் பால் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் செல்போன், டார்ச் லைட், லேப்டாப் ஆகியவைகளுக்கு சார்ஜ் போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் பொருட்களை கவனமாக கையாளுங்கள் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில மின்பொருட்களை ஆஃப் செய்து வைத்துவிடுவது நல்லது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த புயல் நேரத்தில் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் காய்ச்சிய தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.