Connect with us

இது என்ன உத்திரபிரதேசமா? ஜேசிபியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

JCB

தமிழகம்

இது என்ன உத்திரபிரதேசமா? ஜேசிபியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

ஒசூர் மாநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற ஜேசிபியுடன் வந்த மாநகர அதிகாரிகள்: முறையாக தெரிவிக்காமல் கடைகளை அகற்றக்கூடாது என வியாபாரிகள் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியின் 12வது வார்டிற்குட்பட்ட பாகலூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனத்துடன் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வந்ததால் வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. ஏராளமானோர் குவிய தொடங்கியதால் போலிசார் குவிக்கப்பட்டனர்..

வியாபாரிகள் கூறுகையில்:

முறையான அறிவிப்போ, கால் ஆவகாசமோ வழங்கப்படாத நிலையில் எப்படி கடைகளை அகற்றிக்கொள்ள முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் வியாபாரிகளுக்கு ஆதரவாக களமிறங்கியதால் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் அவர்கள், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றிக்கொள்ள 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கினர்

இது குறித்து வியாபாரி சென்னகிருஷ்ணன் தெரிவிக்கையில்

மாநகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கள் உள்ளபோதும் போக்குவரத்து நெரிசல் இல்லாத இங்கு மட்டும் ஆக்கிரமிப்புக்கள் அகற்ற வேண்டிய நோக்கம் என்ன. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்

ஆக்கிரமிப்பு பணிகள் அகற்றிக்கொள்ளாவிட்டால் மாநாட்சி நிர்வாகம் அதனை மீண்டும் அகற்றும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top