Connect with us

அரிவாளால் வெட்டி செல்போன், பணம் திருடிய சம்பவத்தால் மக்கள் பதட்டம்..

223953 murder stabbing

தமிழகம்

அரிவாளால் வெட்டி செல்போன், பணம் திருடிய சம்பவத்தால் மக்கள் பதட்டம்..

பொன்னேரியில் மக்கள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தில் 3 இளைஞர்களை அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்து செல்போன், பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை நேற்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்துள்ளது.

இதில் பொன்னேரி பர்மா நகரை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு இடுப்பு மற்றும் முதுகிலும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சரவணன்(18) என்பவரிடம் செல்போன் பறித்து கொண்டு தலையில் வெட்டியதில் படுகாயமடைந்தார். அதேபோல, வைரங்குப்பத்தை சேர்ந்த பூவரசன்(26) என்பவரை தலையிலும், முதுகிலும் வெட்டி விட்டு அவரிடம் இருந்து ₹3,000 பணத்தை அந்த கும்பல் பறித்து சென்றது.

இது குறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர், அரிவாள் வெட்டில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு  மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இதனிடையே அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்ற விக்கி(25) என்பவரை பொது மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், தலைமறைவான  தமிழ்ச்செல்வன், விஜய், ஸ்டீபன் ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தில் 3 இளைஞர்களை அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top