மதுரையில் தக்காளி விலை குறைந்தது! மக்கள் மகிழ்ச்சி!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்கறிகளின் விலை மிகுந்த உச்சத்தை அடைந்தது. குறிப்பாக தக்காளி, முருங்கைக்காய் விலை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறி

ஏனென்றால் தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வந்து பயிர்கள் நாசம் அடைந்தன. அதோடு தலைநகர் சென்னையில் மழை நீர் சூழ்ந்திருந்ததால் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்தது.

தக்காளி முருங்கைக்காய் போன்ற காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் தக்காளியின் விலை மதுரை மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விலையில் கிலோ 35 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மதுரையில் நேற்று வரை கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்றைய தினம் கிலோ 50 ரூபாய் முதல் கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் திருப்தியில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment