அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2003-ம் ஆண்டுக்குப் பின் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பென்ஷன்(ஓய்வூதியம்)?
நம் தமிழகத்தில் அரசு பணியில் உள்ளவர்களுக்கு தங்கள் பணி ஓய்வு பெற்ற பின்னர் மாதாமாதம் ஓய்வூதியம் அனுப்பப்படும். இந்த நிலையில் 2003ஆம் ஆண்டு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று தகவல் அவ்வப்போது பரவியது.
இந்நிலையில் ஓய்வூதியத் திட்டம் பற்றி தற்போது வல்லுநர் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கோரிக்கை தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக் கூறுகளைப் பற்றி வல்லுநர் குழு ஆராய்ந்து அறிக்கை வெளியீட்டு உள்ளது.
சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை தற்போது தமிழக அரசிடம் அளித்துள்ளது. வல்லுநர் குழுவின் அறிக்கையை பரிசீலித்து உரிய முடிவெடுத்து அதனடிப்படையில் அரசாணை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
