ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ‘பென்சில்’!! போடாதவர்களுக்கு அபராதம்..!!
எங்கு பார்த்தாலும் இருசக்கர வாகன விபத்துகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் அனைவரும் கட்டாயம் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிக அளவில் ஹெல்மெட் அணியாமல் தான் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கிறார்கள். இதனால் காவல்துறையினர் ஆங்காங்கே நின்று அவர்களது வாகனங்களின் மீது வழக்கினை பதிவு செய்கிறார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் அவர்களது வாகனத்திற்கும் அபராத தொகையை விதிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஆங்காங்கே காவலர்கள் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறும்.
அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலியில் ஹெல்மெட் அணிந்து வந்து அவர்களைப் பாராட்டி போலீசார் பரிசுகளை கொடுத்துள்ளனர். அதன்படி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி அவர்களுக்கு பென்சில்களை காவல்துறையினர் பரிசாக வழங்கினார். அதே வேளையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதத்தை விதித்தனர்.
