Connect with us

எச்சரிக்கை!! நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபராதம்!!!

number plate 696x385 1

தமிழகம்

எச்சரிக்கை!! நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபராதம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட் இல்லாமல் சென்றதாக கூறி கடந்த 4 நாட்களில் சுமார் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக செயின் பறிப்பு, பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் நம்பர் பிளேட் இல்லாமல் செல்வதாக கூறிய அவர் வருகின்ற காலங்களில் சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என கபில் குமார் சரட்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நம்பர் பிளேட் இல்லாமல் அதிக வாகனங்கள் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்திருப்பதாகவும், இதன் பேரில் 3 நாட்களாக சோதனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், போலி நம்பர் பிளேட் வைத்திருப்போர்களை கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top