சிக்கலில் ‘வாரிசு’ படக்குழு? – நாளை வெளியாகிறது அபராத விபரம்!!

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இயக்குனர் , வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாரிசு. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அதே சமயம் ஒரு வருடம் கழித்து தளபதி படம் வெளியாக இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்துக்கொண்டே போகிறது.

அதன் ஒருபகுதியாக நேற்றைய தினத்தில் சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமாக ரசிகர்கள் படைசூல இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

இந்த சூழலில் நேற்று நடைப்பெற்ற இசை வெளியீட்டு விழாவில் அதிகப்படியாக இருக்கைகள் சேதம் அடைந்துள்ளதாக நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனால் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், பின்னர் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.