ஒரு கோடி அப்பு, ஒரு கோடி.. மாஸ்க் அணியாதவர்களிடம் வசூலித்த சென்னை மாநகராட்சி!

கடந்த மூன்று ஆண்டுகளுடன் நாம் கொரோனாவுடன் ஒட்டி வாழத் துவங்கி கொரோனா ஊரடங்கு, கொரோனா திருமணம், கொரோனா பாஸ் எனப் பலவற்றைப் பார்த்தாகிவிட்டது.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவத் துறை ஒருபுறம் போராட, மக்களை கொரோனாவில் இருந்து மீட்க அரசாங்கம் ஒருபுறம் முழு முயற்சியில் களம் இறங்கிச் செயல்பட்டு வருகிறது.

மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, வார இறுதி ஊரடங்கு என அரசாங்கத்தின் முயற்சிகள் பலவாயினும் பொதுமக்கள் இதனைக் கண்டுகொண்ட பாடில்லை.

மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியதுடன், மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து இருந்து.

பொதுமக்களின் அலட்சியத்தால் தமிழக அரசு மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கான கட்டணத்தை ரூ.500 ரூபாயாக உயர்த்தியது.

என்னதான் விலையை உயர்த்தினாலும் பொது இடங்களுக்கு முகக் கவசம் வராமல் பொது மக்கள் கட்டிய அபராதத் தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சென்னையில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 18, 819 பேர் அபராதத் தொகை கட்டியுள்ளனர். இதுவரை மொத்தமாக ரூ.1 கோடியே 15 லட்சம் அபராதத் தொகை வசூல் ஆகியுள்ளது.

சமீபத்தில் உயர்த்தப்பட்ட ரூ500 என்ற அபராதத் தொகை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews