கடலுக்குள் பேனா சின்னம்.. ஜன.31ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றக்கூடிய வகையில் கடலுக்குள் அமைய இருக்கக்கூடிய பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

பேனா நினைவு சின்னத்தின் கீழ் கலைஞரின் கருத்துக்கள் கல்வெட்டுகளாக பதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல் பேனா சின்னத்திற்கு செல்லும் பாலமானது அலைவடிவத்தில் அமைக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெத்து காட்டிய காதல் ஜோடிகள்… கொத்தாகத் தூக்கிய போலீஸ்

இந்நிலையில் பேனா சின்னத்தினை அமைக்க தமிழகத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதே சமயம் வருகின்ற ஜனவரி 31-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உதய சூரியன் நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனாவும் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளை கவனிப்பது தந்தையின் பொறுப்பு – ஐகோர்ட் அதிரடி!!

மேலும், ஏற்கனவே மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கொடுத்துள்ள நிலையில், கருத்து கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.