Entertainment
யோகிபாபுவின் ‘பேய் மாமா’ படத்திற்கு சென்சார் அளித்த சான்றிதழ்!
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களில் ஒன்று பேய்மாமா
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்
இந்த படம் ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்தி ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது சென்சார் ஆகியுள்ளதால் திரையரங்குகளில் தான் இந்த படம் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#PeiMama ???? censored with “U/A” . Coming very soon in cinemas.
Directed by @sakthinchid @iYogiBabu @preetham_dr_ @musicrajaryan @mv_panneer @bakiyacinemass @Promounamravi1 @Pro_Bhuvan @LahariMusic @CtcMediaboy pic.twitter.com/a2cxMLE3x3
— r.s.prakash (@rs_prakash3) March 9, 2021
