News
“பெகாசஸ் ஒரு சதி”- அமைச்சர் மீனாட்சி லேகி!!
தற்போது நம் இந்தியாவில் மத்திய அரசாக உள்ளது பாஜக .அந்தப்படி பாஜக இருமுறை தொடர்ந்து வெற்றி பெற்று மத்தியில் செயல்பட்டு வருகிறது என்பதும் உண்மைதான் இத்தகு சூழலில் நம் இந்தியாவில் பாரத பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி .மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என ஏகப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது சந்தித்து சில மக்களுக்கு பிரயோசனம் அளிக்கும் திட்டங்களை அறிவிப்பார் மேலும் பலரும் தங்கள் கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பில் கொட்டி தீர்ப்பார்.
அந்த வரிசையில் தற்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக மீனாட்சி லேகி அவர் தற்போது சில முக்கியமான தகவல்களை கூறியுள்ளார் அந்த படி பெகாசஸ் ஒரு சதி என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டமாக மாறுவதை தடுப்பதற்கும் பிரச்சனையை எழுப்பதற்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறினார். மேலும் நாடாளுமன்றத்தை முடக்கும் திட்டத்துடன் பிரச்சனை எழுப்பப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேலும் தனிநபர் தகவல் பாதுகாப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டமாக உள்ளது என்பதும் வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார் அது நடந்து விடக்கூடாது என்பதற்காக பெகாஸ் போன்ற கதைகளை கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
