வேர்க்கடலைக்கும் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு சம்பந்தம் இருக்கிறதா?

நிலக்கடலையை அதிகமாக உண்ணக்கூடாது. அதை உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து. மாரடைப்பு மற்றும் இதயநோய் வரக்கூடும் என சிலர் கூறிவருகின்றனர்.

நிலக்கடலை சிறப்பு :

நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

இதய நோய் சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் நிலக்கடலைகுறித்து கேட்டபோது,

“நிலக்கடலை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு வரும் என தவறான கருத்து, நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது. வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.

வாரத்திற்கு இரண்டு முறை கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைய வாய்ப்புள்ளது.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. எளிதில் திரும்ப பெறுவது எப்படி?

இதய நோயை தடுப்பதற்கான சக்தியை நிலக்கடலை கொண்டுள்ளது சற்று ஆறுதலாக உள்ளது

அதை தொடர்ந்து “ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செயல்பாட்டில் நிலக்கடலையின் பங்கு என்ன?” என்று சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது,

“வேர்க்கடலையில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கின்றன. அதனால் இதை ஏழைகளின் அசைவ உணவு என்று கூட கூறலாம். உணவு ஆராய்ச்சிகள் (FDA) நிலக்கடலையில் மருத்துவக் குணங்கள் இருப்பதை நிரூபித்துள்ளனர் .

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதில் இருக்கும் சர்க்கரையின் தன்மையை அளவாகக் கொண்டு, இன்டெக்ஸ் (Index) (அதாவது, G – 1 – 14 ) தீர்மானிக்கிறார்கள்.

உடல் எடையை குறைக்க வேண்டுமா? கடைப்பிடிக்கவேண்டியவைகள் என்ன என்ன தெரியுமா?

வேர்க்கடலையில் G-1 குறைவாக உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. மேலும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை பல மடங்கு குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கு தேவையான செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

மேலும் GLP-1 என்ற ஹார்மோன் வேலை செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் போதுமானது, சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.

அப்புறம் என்ன நொறுக்கு தீனி, பொரித்த உணவுகளை நீக்கி விட்டு வேர்க்கடலையை வாங்குங்க, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...