
தமிழகம்
மீண்டும் அதிகரித்த கடலை எண்ணெய் விலை!! எவ்வளவு தெரியுமா?
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் கச்சா எண்ணெய் விலையினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் களின் விலையும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கடலை எண்ணெய் விலை லிட்டருக்கும் ரூ.20 அதிகரித்துள்ளதால் ஹோட்டல் நிர்வாகிகளும், உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே நிலக்கடையில் உற்பத்தி என்பது குறைந்துள்ளதாகவும், அறுவடை முடிவுக்கு வந்ததால்தான் கடலை எண்ணெயின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 15 லிட்டர் கடலை எண்ணெய் ரூ.2,900-க்கும் மற்றும் நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனை ஆகுவது குறிப்பிடத்தக்கது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட சூழலில் தற்போது மேலும் ஒரு சுமையாக கடலை எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
