Connect with us

கடலை மிட்டாய் செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பு! வேட்பாளரின் செயலால் வியந்த தேமுதிக!!

kovilpatti kadalai mittai

தமிழகம்

கடலை மிட்டாய் செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பு! வேட்பாளரின் செயலால் வியந்த தேமுதிக!!

கடலை மிட்டாய் செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பு! வேட்பாளரின் செயலால் வியந்த தேமுதிக!!

வருகின்ற சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை விட அதிகமாக தேர்தல் பரப்புரைகள் தமிழகமெங்கும் நிகழ்கிறது.

தமிழக முதல்வர் தவிர மற்ற அனைவரும் ஒவ்வொரு தெருவுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக வேட்பாளர்கள் பலரும் மக்களை கவரும் விதமான முறைகளை கையாண்டு வருகின்றனர்.

அதன்படி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் இடத்தில் அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப பணிகளை செய்து சுற்றி உள்ளவர்களிடம் சேகரிக்கின்றனர். குறிப்பாக காய்கறி விற்பனை செய்தும், டீக்கடையில் டீ ஆத்தியும், மீன் வியாபாரியிடம் மீன் விற்பனை செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தேமுதிக வேட்பாளர் வாக்காளரை மட்டுமின்றி தேமுதிகவையே வியக்க வைக்கும் வகையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியின் 3வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அங்குள்ள கடைக்கு சென்று இலவசமாக தையல் தைத்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதோடு மட்டுமில்லாமல் அவர் இஸ்திரி கடைக்கு சென்று இலவசமாக இஸ்திரி போடும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதியில் அவர் கோவில்பட்டியில் மிகவும் பேமஸ் ஆன கடலை மிட்டாய் கம்பெனிக்கு சென்று கடலை மிட்டாய் தயாரித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top