உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் நிலவிவரும் ஏற்ற இறக்கத்தில் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேசமயம் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தி வருவதால் டாலரின் மதிப்பானது குறைந்து காணப்படுகிறது.

இதன் எதிரொலியாக வாரத்தின் முதல் நாளான இன்றைய தினத்தில் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன் படி, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5,150 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தானில் பரபரப்பு…. எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.5,618 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,944 ஆக விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து வெள்ளியின் விலையினை பொறுத்தவரையில் ஒரு கிராம் 74.50 காசுகளாகவும், ஒரு கிலோ 74 ஆயிரத்து 500 ரூபாயாக விற்னை செய்யப்படுகிறது.

டிசம்பரில் ரூ.1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: ஒன்றிய அரசு தகவல்!!

மேலும், விலைவாசி உயர்வு மற்றும் கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணிகளால் தங்கம் விலை வரும் காலங்களில் ஒரு கிராம் 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.