
Tamil Nadu
இரண்டே கேள்வி கேட்கிறேன்..? பிரதமருக்கு பிடிஆர் பதிலடி !!
நேற்றைய தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் வரையை குறைக்காமல் இருப்பதற்கு மாநில அரசுதான் காரணம் என கூறினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் எந்தவொரு அரசாங்கமும் வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது என்றும் மற்ற நாடுகளில் அரசாங்கத்தின் வருமானம் சுமார் 30% இருக்கும் என்றும் இவ்வாறு செய்வதால் ஏழைகள் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கலாம் என கூறினார்.
ஆனால் இந்தியா வளரும் நாடு என்பதால் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகுவதாக கூறினார். வரி, வருமானம் இல்லாமல் செலவிடுகிறோம் என்றால் பிரதமருக்கு இரண்டு முக்கிய கேட்பதாக கூறினார்.
இதில் எதற்காக யாரிடமிருந்து வரியை எடுக்கிறோம் என்றும் இதனை நியாயமாக எடுக்கிறோமா ? இதனை சரியான வகையில் பகிர்ந்து கொடுக்கிறோமா ? என பிரதமருக்கு பிடிஆர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனிடையே பெட்ரோல், டீசல் வருயை அதிகரிப்பதால் சமானிய மக்கள் மிகவும் பாதிப்பு அடைவதாக கூறினார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ள போதும் சில மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை என பிரதமர் கூறியதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
