திமுகவில் பரபரப்பு; பிடிஆர் பெயர் திடீர் நீக்கம்!

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் பட்டியலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் திடீர் நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பங்கேற்று பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான முதல் பட்டியலில் அவரது பெயர் மதுரை மாவட்டத்தில் இருந்தது தற்போது அந்த பெயர் நீக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மதுரை பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

மதுரை சிம்மக்கல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வதாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.