மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் 48-வது ஜிஎஸ்டி கூட்டத்தை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான தேதியை உறுதிசெய்வது குறித்து ஆலோசனை நடந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவை, மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக நிதி அமைச்சர் ஒப்புதலுடன் அடிப்படை வரி விதிப்புக்கு ஒப்புதலுடன் வரி விதிக்கப்பட்டதாக கூறினார்.
இதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்திருந்தார். அதோடு இரண்டு நிதி அமைச்சர்களும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்றைய சந்திப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் நிதி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு முழுமையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.