பழனியில் தைப்பூசம் கோலாகலமாய் கொண்டாடப்படுது…


4e6f1c70f79ceb5ceb4bef63083c8b54

தைப்பூச திருவிழா முருகனின் படவீடுகளில் ஒன்றான பழனியில்தான் மற்ற தலங்களைவிட வெகுவிமர்சையாக கொண்டாடப்படுது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில, நாட்டிலிருந்தும் விரதமிருந்து பாதயாத்திரையில் கலந்து கொள்கின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

2efbef18de337d6d5af8b6608a486f66

முருகப்பெருமானின் அருளைப்பெற தைப்பூசம் உகந்த நாள், முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது அனைத்து முருகன் கோவில்களிலும் முருகனடியார்கள் சிறப்பு வழிபாடுகள், நேர்த்திகடன்கள் என வெகு விமர்சையாக கொண்டாடுவர்கள்.

தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்தம் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையும் அனுபவப்பூர்வமாய் கண்ட உண்மையும்கூட. தங்கள் நோய் குணமானதும் பழனி முருகன் கோவிலில் தங்கள் நேர்த்திகடனை காவடி எடுத்து செலுத்துகின்றனர். மற்ற கோவில்களிலும்கூட காவடி எடுக்கும் பக்தர்களும் உண்டு.

தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கென அனைத்து வசதிகளும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.