அண்டா அண்டாவாக பாயாசம்: ஆண்கள் மட்டும் கொண்டாடிய வினோத திருவிழா!!

ஆசிர்வாத புரத்தில் உள்ள 5 கிறிஸ்துவ ஆலயங்களில் ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பாயாச விழா கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் ஏசு பிறந்த திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆசிர்வாத புரம், மேட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு காலரா நோய் ஏற்பட்டது.

அடுத்த 2 மணி நேரத்திற்கு..19 மாவட்டங்களில் அலர்ட்!!

இதன் காரணமாக ஏராளமானோர் ஆலயத்திற்கு தேவையான அரிசி, பால், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வீடுவிடாக சேகரித்து ஆண்கள் மட்டுமே தயாரித்து பாயசம் வழங்கியுள்ளனர்.

இதனை சாப்பிட்ட பொதுமக்கள் உயிர் பிழைத்ததாக ஆண்டுடாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதனை நினைவு கூறும் வண்ணம் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி ஆண்டுகள் மட்டும் பாயாசம் தயாரித்து கொண்டாடி வருகின்றனர்.
அடுத்த 2 நேரம்.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

மேலும், ஆண்கள் மட்டுமே பண்டிகையில் கலந்து கொண்டு பாயசம் தயாரிப்பது அப்பகுதியில் வினோதமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.