
Tamil Nadu
அடகு கடையில் கொள்ளை: வேலூரில் பரபரப்பு!!
வேலூர் காட்பாடியை அடுத்த சேர்காடு பகுதியில் உள்ள இந்து மதி பாண்டு என்பவரின் அடகு கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காட்பாடியை அடுத்த சேர்காடு பகுதியில் உள்ள இந்து மதி பாண்டு என்பவர் அடகு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதே இடத்தில் அவர் தங்கியிருந்தாக தெரிகிறது. இதனிடையே வழக்கம்போல் நேற்று இரவு கடையியை பூட்டி விட்டு அறைக்கு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் இரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் பின்பக்க சுவரில் துளையிட்டு நகை வைக்கப்பட்டு இருந்த பீரோவில் இருந்து சுமார் 30 கிலோ வெள்ளி மற்றும் 750 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனிடையே அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காட்பாடி டி.எஸ்.பி பழனி தலைமையில் போலீசார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
