ஜெய்பீம் போட்ட போடு! 67 குடும்பங்களுக்கு பட்டா! நேரில் சென்று அசத்திய கலெக்டர்!

சூர்யா நடிப்பில் வெளியாகி தற்போது தமிழகத்தில் மிகவும் அதிகமாக பேசப்படும் வரும் திரைப்படம் ஜெய் பீம். இந்த திரைப்படத்தில் பழங்குடியின மற்றும் இருளர் சமுதாயத்தின் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் திரை காவியமாக வெளியானது.

ஜெய் பீம்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழங்குடியினர் வசிக்கும் மயிலம் பகுதிக்கு பார்வையிட நேரில் சென்று இருந்தார். அவர் அங்கு பார்த்தபோது பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாயத்து மக்கள் எவ்வாறு இன்னல் அடைகின்றன என்பதை நேரில் கண்டார்.

இருளர்

இதனை தொடர்ந்து மயிலம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பார்வையிட்டார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். இந்த மழையால் பாதிக்கப்பட்ட அறுபத்தி ஏழு குடும்பங்களுக்கு பட்டா வழங்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வங்கி கணக்கை  ஆரம்பிக்கவும், ஆதார் அட்டை வழங்கவும், ஜாதிச் சான்றிதழ் வழங்கவும் அதிரடி உத்தரவிட்டார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment