ராஜஸ்தானில் ஆசிரியர் அடித்து உயிரிழந்த 9 வயது பட்டியலினத்து சிறுவன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் சுரானா கிராமத்தில் வசித்து வரும் இந்திரா மேக்வால் என்ற 9 வயது சிறுவன் தனியார் பள்ளியில் பயின்று வந்தார். அப்போது பானையில் இருந்து நீர் எடுத்து குடித்த போது இதனை பார்த்த ஆசிரியர் சயில் சிங் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார்.
குறிப்பாக முகம், காது, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் அதோடு உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.