முதல் பாட்டின் சர்ச்சையே முடியவில்லை, அதற்குள் 2வது பாட்டு: பதான் படக்குழு அறிவிப்பு

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பதான் படம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த பாடலில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் ஆபாசமான உடை அணிந்து அருவருப்பான அங்க அசைவுகள் கொடுத்ததை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

pathan

காவி உடை என்பது புனிதமானது என்றும் அந்த காவி நிறத்தை அணிந்து ஆபாச போஸ் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பதான் படக்குழுவினருக்கும் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் ஆதரவளித்தனர் என்பதும் இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

pathan3இந்த நிலையில் பதான் படத்தில் இடம்பெற்ற முதல் பாடலில் இடம்பெற்ற சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது படக்குழுவினர் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பதான் படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என கூறி அந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரிலும் தீபிகா படுகோன் படுகவர்ச்சியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.