பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

2ab7a1d213700dc979cea8e8fb8591bf

இந்து மதக் கடவுளை அவமதித்துப் பேசியது மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிலையில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment