டயர் பஞ்சர் ஆனதால் விமானத்தை தள்ளிய பயணிகள்…. ஒரு சுவாரஸ்ய சம்பவம்…..

பொதுவா இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆனாலோ நாம் தள்ளி செல்வதை பார்த்திருப்போம். ஆனால் விமானம் பஞ்சர் ஆனதால் பயணிகள் இறங்கி தள்ளி சென்றுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அது வேறு எங்கும் அல்ல காத்மாண்டில் தான் இந்த ரூசிகர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து பஞ்சராகியது. இதனையடுத்து விமானத்தை நகர்த்த முடியாததால் உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோர், விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர்.

தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் படம் ஒன்றில் நடிகர் செந்தில் நடிகர் கவுண்டமணியிடம் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறுவார். என்ன வேலை என்று கேட்டால் கப்பல் நடு கடலில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நின்று விட்டால் நீங்கள் இறங்கி தள்ள வேண்டும் என கூறுவார்.

தற்போது பயணிகள் அனைவரும் பஞ்சரான விமானத்தை இறங்கி தள்ளுவதை பார்க்கும்போது அந்த காமெடி தான் நினைவிற்கு வருகிறது. ஏதோ பஞ்சரான பைக் அல்லது காரை சாதாரணமாக கைகளால் தள்ளி செல்வது போல விமானத்தை பயணிகள் தள்ளி செல்லும் வீடியோ தற்போது டிரண்டாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment