Connect with us

உட்ராதீங்க எப்போவ்… ரயிலில் செல்போன் திருட முயன்ற திருடனை 15 கி.மீட்டருக்கு கதறவிட்ட பயணிகள்!

Train

செய்திகள்

உட்ராதீங்க எப்போவ்… ரயிலில் செல்போன் திருட முயன்ற திருடனை 15 கி.மீட்டருக்கு கதறவிட்ட பயணிகள்!

பீகாரில் ஓடும் ரயிலின் ஜன்னலில் இருந்த செல்போனை உயிரை பணயம் வைத்து திருட முஅன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் பெகுசராய் என்ற இடத்தில் திருடன் ஒருவன் ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயற்சித்த போது வசமாக மாட்டவே சுமார் 15 கி.மீ தூரம் ஜன்னலில் தொங்கவிட்டவாறு, பயணிகள் அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த திருடன் நிலையத்தை விட்டு வெளியேறும் ரயிலின் ஜன்னலில் கையை வைத்து பயணி ஒருவரின் மொபைலை பறிக்க முற்பட்டவுடன், பயணி அவரது கையை பிடித்துள்ளார்.

மற்றொரு பயணி திருடனின் மற்றொரு கையைப் பிடித்து இழுத்து பிடித்துள்ளார். அப்படியே திருடனை ஓடும் ரயிலின் ஜன்னலில் சுமார் 15 கி.மீ. ரயிலில் தொங்கியபடி திருடனை பயணிகள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top