
தமிழகம்
மெட்ரோ ரயில்-பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்!!
தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
ஏனென்றால் தினமும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் புதிய பாதிப்பு எண்ணிக்கை 1000 தாண்டி சென்னையில் மட்டும் பதிவாகி வருவதால் அங்குள்ளோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் சென்னை மாநகராட்சி முககவசம் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் பேருந்துகளில் செல்பவரும் சேர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துள்ளது.
தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.
