
தமிழகம்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!! மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்..
கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகளின் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து காலை 6.35 மணிக்கு ராமேஸ்வரத்திற்கும் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு மதுரைக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது.
திருச்செந்தூரிலிருந்து காலை 7.10 மணிக்கு நெல்லைக்கும் மீண்டும் மாலை 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூர்க்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவைகள் வருகின்ற 30-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு கோவைக்கும் மீண்டும் மாலை 3.45 மணிக்கு கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும், மே 23- ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவில்லா விரைவு ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
