2 ஆண்டுக்கு பின் இயங்கிய Passenger train! திருஷ்டி சுத்தி கொண்டாட்டம்!!
கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் தமிழகம் கொரோனா கோரப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு விதமான திட்டங்கள் நடைமுறைப் படுத்தாமல் இருப்பது. இந்த நிலையில் சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வீரியம் குறைய தொடங்கி உள்ளது.
இதனால் நடைமுறைப் படுத்தாமல் இருந்த அனைத்து திட்டங்களும் மெல்ல மெல்ல நடைமுறைக்கு கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 2 ஆண்டுக்கு பின் இன்றையதினம் பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் கொரோனா வீரியம் குறைந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கின. செங்கோட்டை முதல் மதுரை வரை பாசஞ்சர் ரயிலுக்கு ராஜபாளையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இயக்காமல் நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு-கோவை பாசஞ்சர் ரயில் 2 ஆண்டுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டது. பயணிகளுக்கு இனிப்பு தரப்பட்டதுடன் ஈரோட்டில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரயிலுக்கு திருஷ்டி சுத்தப்பட்டது.
