தமிழில் பாஸ் ஆனால் தான் டி.என்.பி.எஸ்.சி வேலை: அதிரடி மாற்றம்!

f25fa0df4b7ae739fca4a77fe2779b3d-1

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழில் பாஸ் ஆனால் மட்டுமே அடுத்த கட்ட தேர்வு எழுத முடியும் என புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பிற மாநிலத்தவர்கள் மிக எளிதில் பணி பெற்று விடுகிறார்கள் என்றும் அதனால் தமிழர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. 

இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்த பாடத்தாள் தேர்வில் வெற்றி 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வு எழுத முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை அடுத்து தமிழ் தெரியாதவர்கள், தமிழை அரைகுறையாக தெரிந்தவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் டிஎன்பிஎஸ்சி யில் உள்ள அனைத்து பணிகளும் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment