தன்னை விட வயதான நடிகையை மணம் செய்யும் ‘பசங்க’ குழந்தை நட்சத்திரம்!

தன்னை விட வயதான நடிகையை ’பசங்க’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

பாண்டியராஜன் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தில் விமல் நாயகனாக நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் அன்பு என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் நடிகர் கிஷோர். இவர் தன்னை விட வயது மூத்த நடிகை ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

pasanga kishoreகுழந்தை நட்சத்திரமாக ’பசங்க’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கிஷோர் அதன் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’கோலிசோடா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தொடர்ந்து அவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சீரியல் நடிகையை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ என்ற சீரியலில் அறிமுகமான ப்ரீத்திகுமார் என்பவர் தான் இவரது காதலி என்பதும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கிஷோர் நமது திருமண நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றும் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழும் நாளை கொண்டாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ’பசங்க’ அன்புக்கரசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கிஷோரைவிட ப்ரீத்தி குமார் 4 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.