Entertainment
பத்து ஆண்டுகளை கடந்த பசங்க
கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வெளியான படம் பசங்க. 2008ல் வந்த சுப்ரமணியபுரம் படத்தை சசிக்குமாரின் கம்பெனி மூவீஸ் தயாரித்திருந்தது. அந்த வெற்றி கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாய் சசிக்குமார் தயாரித்த படமே பசங்க.

முதல்முறையாக சின்ன பசங்களை வைத்து அருமையான கதையை சொல்ல முடியும் என நிரூபித்தார் பாண்டிராஜ்.
இப்படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானவர் விமல்.
இப்படத்தில் நடித்த சின்னஞ்சிறு சிறுவர்கள் பின்னாட்களில் கோலி சோடா படத்தில் நடித்து இப்போது ஹீரோவாக நடிக்கும் அளவு வளர்ந்து விட்டார்கள். இப்படத்தில் காமெடியாக நடித்த சிறுவன் பக்கோடா பாண்டி வளர்ந்து என் ஆளோட செருப்ப காணோம் என்ற படத்திலும் நடித்து முடித்து விட்டார்.
பசங்க படம் மிக கலகலப்பான படம்.சின்னஞ்சிறுவர்களின் உலகம் அவர்களுக்குள் உள்ள ஹீரோயிசம்,வில்லத்தனம் முதலியவற்றை சொன்ன படம்.
படமும் மிக கலகலப்பாக அனைவரும் பார்க்கும் டீசண்ட் படமாகவும் இயக்குனர் பாண்டிராஜ்க்கு நல்லதொரு அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. அதிக செலவில்லாமல் தனது ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களிலேயே எளிமையாக படத்தை இயக்கி ஆஸம் என சொல்ல வைத்தார் பாண்டிராஜ். அதன் பிறகு சில வருடம் முன் வந்த பசங்க2 படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து ஆண்டுகள் ஆனதை ஒட்டி பாண்டிராஜ் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
