குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசம் அனைவரும் சாப்பிடும் உணவுகளில் ஒன்று, சளி தொல்லை இருக்கும் போது நாம் பொதுவாக ரசம் சாதம் தான் சாப்பிடுவோம். அந்த ரசம் சத்தானதாக மாற்ற புதுவிதமான பருப்பு ரசம் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – கால் கப்,
தக்காளி – 2,
உப்பு – சுவைக்கு ஏற்ப ,
புளி – பாதி எலுமிச்சை அளவு ,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி ,
பூண்டு – 3 பல்.
ரசப்பொடிக்கு:
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
தனியா – 3 டீஸ்பூன்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3.
வெந்தையம் – அரை தேக்கரண்டி,
நெய் – கால் தேக்கரண்டி ,
கடுகு – கால் தேக்கரண்டி ,
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு.
செய்முறை:
பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பருப்பை நன்கு மசித்து அதன் பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும் ,புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தக்காளியை நன்றாகக் கரைத்து அதை புளித்தண்ணீயும் சேர்த்து கொண்டு அதனுடன் உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். பிறகு பூண்டை தட்டி சேர்த்து கொள்ளவும் சிறிது கொதித்ததும் ரசப்பொடி போட்டு, ஒரு கொதி வந்ததும் பருப்பு தண்ணீரையும் சேர்க்கவும்.
பாபா ரீ-ரிலீஸ்ஸிற்காக டப்பிங் பணியில் இறங்கிய ரஜினி! வேலையை வேகமாக தொடங்கிய படக்குழு!
ரசம் நுரையுடன் பொங்கி வரும்போது இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும்.