Connect with us

பார்த்திபனின் இரவின் நிழல் – திரை விமர்சனம் !

parthiban speech got attention in iravin nizhal music launch photos pictures stills 1

பொழுதுபோக்கு

பார்த்திபனின் இரவின் நிழல் – திரை விமர்சனம் !

வித்தியாசமான படைப்புகளின் மூலம் தனது திறமையை உலகிற்கு நிரூபிக்க நினைப்பவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார். இன்று படம் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

parthiban iravin nizhal movie songs audio released 1654613447 1 1 1

இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.இந்தப்படத்தில் முதல் 30 நிமிடம் மேக்கிங் வீடியோ வாக நகர அதைத்தொடர்ந்து இடைவேளை அதன் பின் 96 நிமிடங்கள் படம் ஒரே சாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்த்திபன் 3 பாடல்கள் எழுதியுள்ளார்.

அந்த 96 நிமிட காட்சிகளுக்காக ஒரே இடமான 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட 50 வகையான, நகரும், நகராத அரங்குகளில் (Sets) கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது,

இந்த படத்தின் கதைக்களம் ஐம்பது வயது மதிக்கத்தக்க நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியவர் சில காரணங்களினால் இறந்து விட அதற்கு பார்த்திபன் தான் காரணம் என அவரை போலீஸ் துரத்துகிறது .தற்போது நடக்கும் பிரச்சனையில் இருந்த தப்பிக்க பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து,தன் வாழ்க்கைக் கதையை ஒரு ‘ஆடியோ’வாகப் பதிந்தபடி விவரிக்கத் தொடங்குகிறார்.

iravin nizhal movie maayava thooyava song parthiban ar rahman 1651581012 1 1

அந்த வகையில் கதை 1971-ல் தொடங்குகிறது…. குடிகார கணவனால் மனைவி அடித்து கொல்லப்படுகிறாள்,அவர்களுக்கு பிறந்த குழந்தையாக நந்துவின் வாழ்க்கை பயணம் தொடங்கிருக்கிறது, தாயின் மார்பில் இருந்து வருவது பாலா ரத்தமா என தெரியாமல் குடித்து வளரும் நந்து மிக மூர்க்கத்தனமாக வளர்க்கிறான்.

படத்தில் மொத்தம் ஐந்து பார்த்திபன்கள் நடித்துள்ளனர். அதில் முறையே ஜோஸ்வா, பிரவீன்குமார், சந்துரு, ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நாயகன் நந்துவாக நடித்துள்ளனர். இதில் நடித்த அனைவருமே இயக்குநர் பார்த்திபன் மனதில் இருந்த நாயகர்களை அப்படியே தத்ரூபமாக பிரதிபலித்திருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.

அதேபோல் நந்துவிற்கு மூன்று கதாநாயகிகள். சினேகா குமாரி, பிரிகிடா சாகா, சாய் பிரியங்கா ருத் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படி வக்கிரகுணத்துடன் இருக்கும் நந்துவின் பயணத்தில் அவரது முந்தைய வாழ்க்கை பிளாஷ்பேக் ஆக விரிகிறது. அதில் இச்சமூகம் மூலம் அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்? இதற்காக அவர் என்னவெல்லாம் இழந்தார்? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கான காரணங்கள் என்ன? என்பதை விவரிக்கிறது இரவின் நிழல் திரைப்படம்.

ஐம்பது வயது நந்து வாக ஒளிந்திருக்கும் பாழடைந்த ஆசிரமத்தின் அரங்க அமைப்பில் தொடக்கி , அடுத்தடுத்த ‘சேஞ்ச் ஓவர்’களில் அவர் இடையிடையே வந்து கதை சொல்லும் உத்தி, அவர் முன்பாகவே கடந்த காலத்தின் நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் ‘நியோ – நாய்ர்’ தன்மையுடன் விரிவது என இயக்குநர் பார்த்திபன் மிரட்டியுள்ளார்.

குறிப்பாக ஏ ஆர் ரகுமானின் காயம், மாயவா, பாவம் செய்யாதிரு மனமே ஆகிய பாடல்கள் மனதை வருடுகின்றது. அதேபோல் காட்சிகளுக்கு உயிரூட்டும் படியான ஆழமான பின்னணி இசையை அசால்டாக படத்தை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் டைட்டில் தெரியுமா? வீடியோவுடன் வெளியான மாஸ் அப்டேட்

முதலில் இப்படி ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கே நடிகர், இயக்குநர் பார்த்திபனை பாராட்டியே ஆகவேண்டும்.ஒரு படத்தை ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் பாணியில் கொடுத்து அதை ரசிக்கவும் வைத்து வெற்றி பெறவும் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

இப்படி ஒரு படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது டெக்னிக்கல் டீம் மட்டுமே. அவர்கள் இல்லையேல் இப்படம் இல்லை. இப்படி ஒரு சாத்தியமில்லாத படத்தை சாத்தியமாக்கியதற்கு பக்கபலமாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவரது டீம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவரது குழு , கலை இயக்குநர் விஜய் முருகன் அவரது டீம் ஆகியோர்களுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.இப்படியொரு சாத்தியமற்ற முயற்சியை சாத்தியமாக்கி ஆச்சரியப்படுத்திக் காட்டியதற்காகவே இந்தப் படத்தைப் பார்த்து வியக்கலாம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top