Connect with us

சென்னைக்கு குரல் கொடுத்த நடிகர் பார்த்திபன்:

Entertainment

சென்னைக்கு குரல் கொடுத்த நடிகர் பார்த்திபன்:

24484761f2aae3f4ca802ae968a41cb2-2

சென்னை என்றாலே ஒரு காலத்தில் வந்தாரை வாழ வைக்கும் நகரமாக கருதப்பட்டது. ஆனால் இன்று சென்னையில் இருந்தால் உயிருடன் வாழமுடியாது என்ற நிலையை கொரோனா ஏற்படுத்திவிட்டது. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் சென்னையில் தான் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை இதுபோல் பல பாதிப்புகளையும் இயற்கை பேரிடர்களையும் சந்தித்து உள்ளதாகவும், அவைகளில் இருந்து மீண்டது போல் கொரோனாவிலும் இருந்தும் மீண்டும் வரும் என்று சென்னையின் குரலாக பார்த்திபன் குரலில் ஒரு கவிதை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த கவிதை இதுதான்

தடைகள் ஆயிரம் தகர்த்தவன்

படைகள் ஆயிரம் பார்த்தவன்

பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன்

பேரலையைக் கண்டவன், பேரிடரும் கண்டவன்

பெயர் மாறி, உரு மாறி வலுவானவன்,

எதுவந்த போதும் நிறம் மாறாதவன்

வந்தவர் எத்தனை, போனவர் எத்தனை

கண்டது எத்தனை, கொண்டது எத்தனை

என் பலம் எனதல்ல,

என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம்.

நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால், உளத்தால்

எவ்வழி இடர் வரினும், தளர்வரினும் என் கரம் இறுகப் பற்றும்

என் மக்களே என் பலம்.

என் மக்கள் மனதில் தன்னம்பிக்கை அணிந்து கொண்டு

முகத்தில் கவசம் அணிந்து

சமூக விலகலோடு

இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர்

வீழ்வேனென்று நினைத்தாயோ!

மீண்டு வருவேன்! நான்சென்னை!.

என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ!

மீண்டு வருவேன்! நான்சென்னை!.

அமைச்சர் வேலுமணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ள இந்த கவிதையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top