Entertainment
விஜய் சேதுபதியின் மாஸ்டர் பிளானை தைரியமாக கேள்வி கேட்ட பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் சினிமா மேடையில் பேசினாலும் சரி டுவிட்டரில் பதிவு செய்தாலும் சரி அதில் ஒரு வித்தியாசமும் கவிதைத்தனமும் இருக்கும் என்பது தெரிந்ததே
அந்தவகையில் நேற்று வெளியான விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ குறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் தளத்தில் வித்தியாசமான பதிவு செய்துள்ளார். அவர் நேற்று பதிவு செய்த ஒரு டுவீட்டில் கூறியதாவது: ‘நண்பர் விஜய் சேதுபதிக்கு DOUBLE வெற்றியாகவும், நாணயமிக்க லலித் அவர்களுக்கு மிக்க நாணயங்களும், இயக்குனருக்கு கோடிகள் கூடுதலாகவும், (இச்சமயத்தில் குறைக்கச் சொல்லி சங்கங்கள் சொல் மீறியும்) உடன் நடிப்போரும் பேரும் பெற வாழ்த்துக்கள்! என்று தெரிவித்திருந்தார்
இதனை அடுத்து அவர் இன்று மேலும் ஒரு டுவிட்டை ‘துக்ளக் தர்பார்’ குறித்து பதிவு செய்து உள்ளார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி உடன் பார்த்திபன் நடித்துள்ள காட்சி ஒன்றின் புகைப்படத்தை பதிவு செய்து அதில் அவர் கூறியதாவது: நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு ”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன? என்று கூறியுள்ளார்.
விஜய்சேதுபதியின் மாஸ்டர் பிளான் குறித்து பார்த்திபன் பதிவு செய்த இந்த டுவீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
