பார்த்திபனை அவமானப்படுத்தியதற்காக வருத்தப்பட்ட இளையராஜா.. மீண்டும் இருவர் சந்தித்த போது நடந்த எமோஷன்..

தமிழ் சினிமாவில் இசைக்கென்று மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் தான் இசைஞானி இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இசையமைத்த பாடல்கள் இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கூட அனைத்து தருணங்களிலும் கேட்கக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது. அப்படி இருக்கையில் இளையராஜா மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் தான் பார்த்திபன். காமெடி கலந்து காமிக்கல் கதாபாத்திரங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் மட்டுமில்லாமல் மிக வித்தியாசமான முயற்சிகளை தான் இயக்கும் படங்களிலும் வெளிப்படுத்தி என்றைக்குமே புதுமையான கதை களத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் தமிழ் சினிமாவில் அவர் இருந்து வருகிறார்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்து வருவதுடன் மட்டும் இல்லாமல் மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதனிடையே டீன்ஸ் என்ற பெயரில் பார்த்திபன் இயக்கி உள்ள புதிய திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் பதின்ம வயதில் இருக்கும் குழந்தைகள் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வது போன்று கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது. அதே போல, இமான் இசையில் உருவான பாடல்களும் ரசிகர் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது.

இதனிடைய இளையராஜாவுக்கும், தனக்கும் நிகழ்ந்த உரையாடல் ஒன்றை பற்றி நேர்காணல் ஒன்றில் பார்த்திபன் தெரிவித்த கருத்து தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இது பற்றி நடிகர் பார்த்திபன் பேசுகையில், “ஒரு இசை நிகழ்ச்சி மேடையில் எனக்கு இசை தெரியுமா எனக் கூறி இளையராஜா என்னை அவமானப்படுத்தி இருந்தார். அப்படி அவர் கேட்டதால் நான் கொஞ்சம் கூட வருத்தம் அடையவில்லை.

ஏனென்றால் எனக்கு நிஜத்தில் இசை பற்றி எதுவும் தெரியாது. அப்படி ஒரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டிருக்கக் கூடாது. அது வேறு விஷயம். இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டிருக்க வேண்டாம் என்பதும் அவருக்கு தெரியவில்லை என்பது முக்கியம்.

அப்படி இருக்கையில், சமீபத்தில் நான் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இது பற்றி பேச்சு வந்தது. அவர் அப்படி என்னிடம் கேட்டது இளையாராஜாவுக்கே உறுத்தி உள்ளதாக கருதுகிறேன். அப்போது இளையராஜா என்னிடம், ‘நீ திரும்ப என்னிடம் உங்களுக்கு இசை தெரியுமா என கேட்டு இருக்க வேண்டியதுதானே?. நீ ஏன் என்னை கேள்வி கேட்காமல் விட்டுவிட்டாய். உண்மையில் எனக்கும் இசை தெரியாது. நானே எதையோ போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறேன்’ என ராஜா என்னிடம் சொன்னார். இதுதான் இளையராஜாவுடைய பதில். அவர் அப்படித் தான்” என பார்த்திபன் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...