பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு..!

பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கு மே 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் பண்ருட்டி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதி நேர படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

படித்துக் கொண்டே வேலை செய்ய வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் இந்த பகுதி நேர பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழக முழுவதும் ஏராளமானோர் பொறியியல் பட்டதாரிகளாக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெகுலர் கல்லூரிகள் படிக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்ட நிலையில் இந்த படிப்பில் பலர் விருப்பத்துடன் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தற்போது பகுதி நேர பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருவதாகவும் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகள் படிக்கப்படும் இந்த பகுதி நேர பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்றைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி உள்ளது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் தேவை என்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-2235 8314/358276  என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.