Connect with us

பரோட்டா மாஸ்டரை கொலை செய்த கும்பல்: வெளியான பகீர் தகவல்!!!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

தமிழகம்

பரோட்டா மாஸ்டரை கொலை செய்த கும்பல்: வெளியான பகீர் தகவல்!!!

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் பகுதியில் பரோட்டா மாஸ்டர் கொலை செய்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி முடிவைத்தான் பகுதியை சேர்ந்த பொன் செந்தில் முருகன் என்பவர் உணவு கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அவர் பணிபுரிந்து வந்த 2 சிறுவர்கள் பணம் கொடுக்காமல் உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனை பரோட்டா மாஸ்டர் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் கடந்த 5-ம் தேதி தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று கொலை செய்தனர்.

இதனிடையே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் படி, பரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் இது வரையில் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

குறிப்பாக பரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் என்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top