முன்கூட்டியே வருகிறதா பாராளுமன்ற தேர்தல்.. பரபரப்பு தகவல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே டி ராமராவ் இது குறித்து கூறிய போது ’நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு முன்கூட்டியே தேர்தலை நடத்தினாலும் சட்டமன்ற தேர்தல் உடன் பாராளுமன்றத்தை தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தை கலைக்கட்டும் என்றும் தனது கார்ப்பரேட் நண்பர்களின் கரங்களை மட்டுமே மத்திய அரசு தள்ளுபடி செய்வதாகவும் ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை தற்போது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த அலை ஓய்ந்த பின் தான் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அதனால் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் உடன் கர்நாடகா, தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்களின் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு சாதகமான நிலை இருந்தாலும் முழுமையான ஐந்து ஆண்டு காலத்தை முடித்துவிட்டு தான் பாராளுமன்ற தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.