போர்க்களமாக மாறிய இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது : எதற்காக தெரியுமா ?
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவச பொருட்கள் கூட வாங்க முடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் தற்போது அங்கு போர்களமாக மாறி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எரிபொருட்கள் கூட வாங்க முடியாத நிலை உருவாகி இருப்பதால் இலங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாளோன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மின் இணைப்பு கிடைக்காமல் மிகவும் அவதி படுவதால் ஒட்டுமொத்த மக்களும் இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டு விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பொருளாதார பிரச்சனை குறித்து இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடிகளை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், இக்கூட்டத்தில் மைத்திரிபால சிரிசேனா கட்சியினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாகவும் கூறப்படுகிறது.
