ஸ்ரீமதி மரணம்! பெற்றோரை விசாரிக்க நேரிடும்.. ஐகோர்ட் எச்சரிக்கை!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

வழக்கின் விசாரணை அமர்வு நீதிபதி சந்திரசேகரன் இன்று மீண்டும் வந்தது. அப்போது காவல்துறையினர் தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை.. நாளை மீண்டும் திறப்பு..!!

அதே சமயம் இரண்டு மாதங்களில் விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் ரத்து செய்யும் வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதை சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க என்ன பிரச்சனை உள்ளது? என்ற கேள்வியை முன்வைத்தார்.

ஓடும் பேருந்தில் இறங்கிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? என கூறினார். விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். மேலும், மாணவி பயன்படுத்திய செல்போன் ஒப்படைக்காவிட்டால் விசாரிக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.