பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்: பள்ளி மாணவன் தற்கொலை!!

கடந்த சில நாட்களாகவே பள்ளிமாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை அடுத்த கோயம்பேட்டில் அந்தோனி தினேஷ் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி மாணவனை பெற்றோர்கள் கண்டித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் திடீரென எதிர்பாராத விதமாக வீட்டில் யாரும் இல்லாத பட்சத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தூக்கில் சடலமாக கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment